பெண் தொழில் முனைவோருக்கு உதவ உத்யோகினி திட்டம் பற்றி அறிந்து கொள்வோம் ...!

இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர் பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி எனப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.பெண்கள் இவ்வாறு வெற்றியாளர்களாக மிளிர்வதைக் கவனித்த அரசாங்கம் பெண் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறது. இவற்றைப் பெண்கள் எளிதாக அணுகிப் பலனடையலாம். அத்தகைய சில திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் "உத்யோகினி திட்டம் "

இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்கள் மற்றும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு நிதி ரீதியான ஆதரவளித்து உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் அவர்கள் வணிக முயற்சியில் ஈடுபட்டு அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையும் பெண் வர்த்தகத்தை ஊக்குவிக்கப் பல திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியாவில் முதன் முதலாகப் பெண் வர்த்தக மையத்தைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிறுவி உள்ளது .

More News >>