NCC உறுப்பினர்களுக்காக ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் ஆப்...!
இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கடந்த மாதம் வியாழக்கிழமை அன்று ( 26-08-2020) NCC பிரிவினருக்குப் பயன்படும் வகையில் ஒரு மொபைல் ஆஃப் யை வெளியிட்டார்.கொரோனா நோய்த் தொற்றால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் NCC உறுப்பினர்கள் தங்களின் பயிற்சியை மேற்கொள்ள இயலாமல் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் DGNCC ( Director General National Cadet Corps) என்ற செயலியை அறிமுகம் செய்தார்.
இந்த செயிலியின் மூலம் அவரவர்களுக்குத் தேவையான பயிற்சியை இணைய வழி மூலம் பெறலாம்.மேலும் ராஜ்நாத் சிங் அவர்களும் ஒரு NCC உறுப்பினர் ஆவார்.