வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புது அனுபவம்
வாட்ஸ்அப் செயலியின் கடந்த ஐஓஎஸ் பீட்டா வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது அம்சம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட இருக்கிறது. v2.20.199.5 beta என்ற ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் வடிவம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பயனர்கள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு அரட்டைகளுக்கு (சாட்) வெவ்வேறு வண்ண பின்னணிகளைத் தெரிவு செய்து கொள்ள இது உதவும். தற்போது வடிவமைப்பு நிலையில் இருப்பதால் பீட்டா பயனர்கள் இப்போது பயன்படுத்த முடியாது.
வாட்ஸ்அப் வால்பேப்பர் என்று ஒரு செயலி உள்ளது. கூகுள் பிளேவில் இது கடைசியாக 2011ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கூறப்படும் வடிவமைப்பு பணிகள் நிறைவுறும்பட்சத்தில் இந்தச் செயலி கூகுள் பிளேவில் புதுப்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது பீட்டா வடிவத்தைப் பயன்படுத்தி வருபவர்கள் அச்சமயம் இப்புதிய அம்சத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிகிறது.
ஸ்டோரேஜ் பார்
வாட்ஸ்அப் நிறுவனம் சேமிப்பு பயன்பாட்டையும் மறுவடிவமைப்பு செய்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் மீடியா ஃபைல்கள் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதைக் காட்டும் சேமிப்பு பட்டி (stroage bar) ஒன்று புதிதாகக் கொடுக்கப்படும். எவற்றை நீக்கலாம் என்ற பரிந்துரையும் அளிக்கப்படும். அவற்றைக் கொண்டு தேவையற்ற ஃபைல்களை அழித்துச் சேமிப்புக்கான இடத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்