டைரக்டர் செல்வராகவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு..ரசிகர்கள் கேட்ட அப்டேட்..

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். ஆனாலும் தனுஷ் என்றதும் ரசிகர்கள் செல்வரகவனை இழுத்துக் கொள்கிறார்கள். எங்களுக்கு எப்போது புதுப்பேட்டை 2ம் பாகம் அப்டேட் கிடைக்கும் என்று அவர்கள் நச்சரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் அவரும் தனுஷுடன் பேசி இருக்கிறேன், ஸ்கிரிப்ட் ரெடியாகிறது என்று கூறிய வண்ணம் இருந்தார். திடீரென்று போன மாதம் செல்வராகவன் அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

சாணி காயிதம் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகச் செல்வராகவன் தெரிவித்தார். அதற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்ததுடன்,நான் பார்த்த என்னுடைய அண்ணன் செல்வராகவன் நடிப்பை இப்போது இந்த உலகமே பார்க்கப்போகிறதுஎன்றார். இந்நிலையில் சில தினக்களுக்கு முன் செல்வராகவன் வீடியோவில் தனது நடிப்பு சேம்ப்ளை ஹாலிவுட் ஹீரோ ஜானிடெப் போன்று மேக்கப்பில் நடித்துக்காட்டினார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் தனுஷ் மாஸ்க் அணிந்து வருவது போன்ற ஸ்டில் வெளியிட்டு,இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு அதுதான் மேட்டரு எனதெரிவித்து கொரோனா பற்றிய விழிப்புணர்வை சொல்லி இருக்கிறார். அதற்கு லைக்ஸ் வந்ததைவிட கொக்கி குமார் (புதுப்பேட்டையில் தனுஷ் பெயர்) 2ம் பாகம் அதாவது புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும் என்று செல்வரகவனிடம் கேட்டு வருகின்றனர்.

More News >>