முறையற்ற பரிவர்த்தனை... அரச குடும்பத்தினரையே நீக்கிய சவுதி மன்னர்!
சமீப காலமாக சவுதியின் பாதுகாப்பு அமைச்சகத்தில் முறையற்ற பரிவர்த்தனைகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு காரணமாக அரசு குடும்பத்தினர் மீது கை காட்டப்பட்டது. இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் சவுதி மன்னர். அதன்படி, ஏமனுடன் சண்டையிடும் கூட்டுப் படையின் தளபதியும் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசருமான ஃபாகத் தனது பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருடன் ஃபாகத் மகனும் துணை ஆளுநராக இருந்த அப்துல்லாசீஸ் என்பவரும் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த 4 உயர் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் சவுதியில் பலத்த சர்ச்சைகளை .ஏற்படுத்தியுள்ளது சவுதியில் அரசு குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த 2017ஆம் ஆண்டு அரச குடும்பத்தை சேர்ந்த பலரை பிடித்து வைத்திருந்து பின்னர் 100 பில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலரை பிணைத் தொகையாக வாங்கிக்கொண்டு விடுவித்தது அப்போது பெரிய சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.