பீட்ரூட் பொரியல் சாப்பிட பிடிக்கவில்லையா??அப்போ பீட்ரூட் பாயசம் ட்ரை பண்ணுங்க..சுவையா இருக்கும்!!!

பீட்ரூட் உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்…ஆனால் சிலருக்கு பீட்ரூட் பொறியலை சாப்பிட பிடிக்காது.குறிப்பாக குழந்தைகள் விரும்பாத காய்களுள் ஒன்று.இதனால் குழந்தைகளை கவரும் படி பீட்ரூட்டில் சுவையான,இனிப்பான பாயசத்தை செய்து கொடுங்கள்.நிச்சயமாக விரும்பி குடிப்பார்கள்….ஆரோக்கியமும் வளரும்….இது இந்திய இனிப்பு வகைகளுள் ஒன்று ஆகும்

தேவையான பொருள்கள்:-

பீட்ரூட்-4

பால்-1 கப்

நெய்-1 கப்

சர்க்கரை-3/4 கப்

ஏலக்காய் பொடி-தேவையான அளவு

முந்திரி-தேவையான அளவு

செய்முறை:-

முதலில் மிக்சியில் 4 பீட்ரூட்டை நன்கு வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றவும்.நெய் காய்ந்தவுடன் அதில் நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நெய் விட்டு கிளறவும்.5 நிமிடத்திற்கு பிறகு அதில் பால் சேர்த்து 15 நிமிடம் சமைக்கவும்.

அடுத்து அதில் ¾ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

ஏழு நிமிடத்திற்கு பிறகு சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூடான பீட்ரூட் பாயசம் தயார்.

கடைசியில் பீட்ரூட் பாயாசத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் முந்திரியை அலங்கரித்து சூடாக பறிமாறுங்கள்.

More News >>