குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதற்கிடையே, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேரும் இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இந்த துயர சம்பவத்தில், 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும், மருத்துவமனையில் 90 சதவீதம் காயங்களுடன் மற்றவர்களை அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், அடுத்தடுத்த நாட்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சென்னையை சேர்ந்த அணுவித்யா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, குரங்கணி காட்டுத் தீ விபத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com