நான் ஈ பட வில்லன் ஜோடியாகும் மடோனா.. புதிய பட டீஸர் ரிலீஸ்..
நானி, சமந்தா ஜோடியாக நடிக்க எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய படம் நான் ஈ. இதில் வில்லனாக நடித்தவர் கிச்சா சுதீப். இவர் தற்போது கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சுதீப்புக்கு இன்று 47 வது பிறந்த தினம் அவரது டிவிட்டர் பக்கத்தை ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து சொல்லியே நிரப்பிவிட்டனர், பிறந்த தினத்தை யொட்டி சுதீப் நடித்துள்ள கன்னட படமான கோட்டிகோபா 3படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மடோனா செபாஸ் டின் கிளாமர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தை சிவகார்த்தி டைரக்டு செய்திருக்கிறார். கோட்டி கோபா 3டீஸரை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோட்டிகோபா3 டீஸர் ரிலீஸ் ஆகி இருப்பதால் சுதீப் நடித்து வரும் மற்றொரு படமான பேந்தம் பட டீஸர் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. இதனை இப்படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி தெரிவித்திருக்கிறார்.சுதீப் தமிழில் விஜய் நடித்த புலி படத்திலும். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முடிஞ்சா இவன பிடி படத்திலும் நடித்திருக்கிறார்.