ஆளுங்கட்சியை வறுத்தெடுக்கும் பிரகாஷ்ராஜ் - அரசியலில் குத்திக்கிறாரா?

எந்த அரசியல் கட்சியிலும் இல்லையென்றாலும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் நடத்த உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

மங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் பேசினார். அப்போது, “எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் பிரச்சாரத்துக்கு செல்வதில்லை. ஆனால், வகுப்புவாதத்தை வளர்த்து தேசத்தை ஆபத்துக்கு உள்ளாக்கும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்” என தெரிவித்தார்.

மேலும், “ஊழலைவிட பெரும் தீங்கு வகுப்புவாதம். கட்சி சாராதவன் என்கிற முறையில் ஆட்சியில் இருப்போர்களிடம் கேள்வி கேட்கிறேன். கேள்வி கேட்போரை அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் ஆளாக முத்திரை குத்துகிறார்கள்.

ஒரு இந்து பெண்ணை கடத்தினால், 10 முஸ்லீம் பெண்களை கடத்திக் கொண்டுவர வேண்டும் என்று கூறும் யோகி ஆதித்யநாத்தையும், தலித்துகளை நாய்களுடன் ஒப்பிட்டுப்பேசும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவையும் தலைவர்களாக பார்க்க முடியாது” என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>