இரும்பு ஹீரோவை தாக்கிய கொரோனா வைரஸ்.. அதிர்ச்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள்..
சீனாவில் பரவிய கொரோனா அந்த நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது . ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னமும் கட்டுப்பட வில்லை. தொற்று பரவல் நீடிக்கிறது, பலி எண்ணிக்கையும் தொடர்கிறது. பேய் வீட்டில் இருந்தால் பேயோடு வாழ்ந்து பழகிக்கொள் என்பதுபோல் இப்போது கொரோனாவோடு வாழப் பழகிக்கொள் என்று சொல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் முறையை அமெரிக்க பல மாதங்களுக்கு முன்பே அமலுக்குக் கொண்டு வந்துவிட்டது.
கொரோனா தொற்றிலிருந்து அவரவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள அறிவுறுத்திவிட்டு மற்ற வேலையில் கவனத்தைத் திருப்பிக் கொண்டது அந்நாட்டு அரசு. அமெரிக்காவில் கொரோனாவுக்குள்ளானவர்கள் பல லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை சிலர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டனர். சிலர் மரணம் அடைந்தனர். ஹாலிவுட்டில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் நடித்ததுடன் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராக். இவர் டிவியில் வரும் டபிள்யூ டபியூ எஃப் அதிரடி சண்டை போட்டிகளில் அதிரடி காட்டி எதிரிகளுக்கு மரண அடி கொடுக்கும் இரும்பு மனிதர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த 2 மாதத்துக்கு முன் தனக்கு கொரோனா தொற்று வராமல் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்கிறார் என்று பேட்டி அளித்திருந்தார் ராக். தற்போது அவரை கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. ராக் கொரோனா தொரற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதி செய்துள்ளார். அவருக்கு மட்டுமல்ல ராக் மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சவாலான மற்றும் கடினமான காலத்தை நாங்கள் கடந்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவோம் என்று ராக் தெரிவித்துள்ளார்.ராக் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரும் குடும்பத்தினரும் குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களும் விருப்பமும் தெரிவித்து வருகின்றனர்.