ஆபத்தான ஆறு மொபைல் Apps: அகற்றிவிட்டீர்களா?

இணையவெளி பாதுகாப்பு நிறுவனமான பிரடியோ(Pradeo) ஆறு செயலிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்துள்ளது. அவை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன.

கன்வீனியண்ட் ஸ்கேனர் 2, சேஃப்டி ஆப்லாக், புஷ் மெசேஜ் டெக்ஸிடிங் & எஸ்எம்எஸ், எமோஜி வால்பேப்பர், செப்பரேட் டாக் ஸ்கேனர் மற்றும் ஃபிங்கர்டிப் கேம்பாக்ஸ் ஆகிய ஆறு செயலிகளை ஜோக்கர் என்ற ஃப்ளீஸ்வேர் பாதித்துள்ளது. இந்த செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, ஜோக்கர், பயனர்களுக்குத் தெரியாமல் பல கட்டண சேவைகளை பதிவு செய்துவிடும். பயனர் கணக்கிலிருந்து இந்தச் சேவைகளை 'கிளிக்' செய்தும், குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியும் இணைத்து விடும். ஜோக்கர், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய செயலிகளை பாதிக்கக்கூடியதாகும்.

கன்வீனியண்ட் ஸ்கேனர் 2 செயலியை 1 லட்சம் பேரும், செப்பரேட் டாக் ஸ்கேனரை 50 ஆயிரம் பேரும், சேஃப்டி ஆப்லாக் செயலியை 10 ஆயிரம் பேரும், புஷ் மெசேஜ் டெக்ஸ்டிங் & எஸ்எம்எஸ் செயலியை 10 ஆயிரம் பேரும், எமோஜி வால்பேப்பர் செயலியை 10 ஆயிரம் பேரும், ஃபிங்கர்டிப் கேம்பாக்ஸ் செயலியை ஆயிரம் பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர்.கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இவை அகற்றப்பட்டாலும் பயனர்களின் போனில் இவை இருந்தால் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, பயனர்கள் இவற்றை அகற்றிவிட வேண்டும்.

2017ஆம் ஆண்டிலிருந்து ஜோக்கரால் பாதிக்கப்பட்ட 1,700 செயலிகளை கூகுள் அகற்றியுள்ளது. இந்த ஆண்டு ஜோக்கரின் இன்னொரு வடிவத்தை இணைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

More News >>