ஒருநாள் போட்டி விளையாடும் தகுதியை முதன்முறையாக பெற்றது நேபாளம்!
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளம், ஒருநாள் போட்டிகள் விளையாடும் தகுதியை முதன்முறையாக பெற்றுள்ளது.
இது அந்நாட்டு விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தற்போது நடந்து வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள், ஐயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த தகுதிச் சுற்றில் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாப்புவா நியூ கினியா நாட்டுக்கும் நேபாளத்துக்கும் இடையில் நேற்று தகுதிச் சுற்றின் ப்ளே-ஆஃப் போட்டி நடைபெற்றது. இதில், நேபாளம் பாப்புவா நியூ கினியாவை தோற்கடித்தது. இதனால் ஐசிசி, நேபாளத்துக்கு முதன்முறையாக ஒருநாள் போட்டிகள் விளையாடும் தகுதியை கொடுத்துள்ளது.
ஆசிய நாடுகளில் மேலும் ஒரு நாட்டுக்கு சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதற்கான தகுதியை ஐசிசி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com