கலிபோர்னியாவில் வெப்ப அலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் தென் கலிபோர்னியா பகுதியில் கடும் வெப்ப அலை ஏற்படலாம் என்று தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள தேசிய வானிலை சேவை மையத்தின் ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி, அப்பகுதியில் வசிக்கும் உறவினர்கள், குடும்பத்தினர் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், வெளியில் செல்லக்கூடியோரை எச்சரிக்கும்படி ஷிங்குவா செய்தி நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு கடற்கரை பகுதியில் எழும் உயர் அழுத்தம் வெப்பநிலையை வழக்கத்திலிருந்து 20 முதல் 25 டிகிரி வரை அதிகமாக்கும் என்றும் செப்டம்பர் 4 (வெள்ளி) காலை 10 மணி முதல் செப்டம்பர் 7 (ஞாயிறு) இரவு 8 மணி வரைக்கும் வெப்பநிலை 43.3 முதல் 46.1 செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அச்செய்தி குறிப்பு கூறுகிறது.வெப்ப அலையினால் காட்டுத்தீ உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் நேரலாம் என்றும் இந்த அதிக வெப்பம், உயிரிழப்பு நேரக்கூடிய அளவுக்கு உடல்நிலையை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More News >>