அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சுவாதிக் கொலை வழக்கு தொடர்பான படம்...ஒடிடியில் ரிலிஸ்...!
சில வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறப்பட் டதுடன் ரத்த வெள்ளத்தில் ராம் குமார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு அவர் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதை மையமாக வைத்து இயக்குனர் ரமேஷ் செல்வன், சுவாதி கொலை வழக்கு என்ற நுங்கம்பாக்கம் என்னும் பெயரில் திரைப்படம் இயக்கி தயாரித்தார். ஆனால் அப்படம் ரிலீஸ் செய்ய முடியாமல் பல தரப்பிலிருந்து வம்பு வழக்கு வந்தது. அந்த வழக்குகளை இயக்குனர் சந்தித்து வந்தார். படத்தை வெளியிட இரண்டு வருடமாக அவர் போராடி வந்தார். அதற்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
இயக்குனர் ரமேஷ் செல்வன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:"சுவாதி கொலை வழக்கு" என்ற நுங்கம் பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்கு பின் திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப் பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் பாலாஜி ஆகியோருக்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது. மேலும் ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தையும். சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறுதியாக இப்படம் அடுத்த மாதம் பிரபல OTT நிறுவனத்தின் மூலம் வெளியிடப் படுகிறது.
இவ்வாறு இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் தெரிவித்திருக்கிறார்.சுவாதி கொலை வழக்கு நுங்கப்பாக்கம் படத்தில் ஹைரா மற்றும் மனோ முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.