12 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுற்றதுhellip ட்ரம்ப் ஜூனியர் மனைவி விவாகரத்து!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகனான டொனால்டு ட்ரம்ப் ஜூனியரும் அவரது மனைவி வெனஸ்ஸாவும், `எங்களது 12 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம்’ என்று அறிக்கை வழியாக தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும், `12 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு நாங்கள் இருவரும் எங்கள் தனித் தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறோம். நாங்கள் இருவரும் மற்றவர் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் பரஸ்பரம் மரியாதை வைத்துள்ளோம்.

எங்களுக்கு 5 அழகான குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள்தான் எங்களின் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர். வெனஸ்ஸா தான், இந்த விவாகர்த்துக்கு விண்ணப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தம்பதிகள் இருவரும் பிரியும் பட்சத்தில், குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமை ட்ரம்ப் ஜூனியருக்கே இருக்கும் வகையில்தான் வெனஸ்ஸா விவாகரத்துக்கு விண்ணப்பித்து உள்ளாராம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>