இரவில் தூக்கம் வரவில்லையா??அப்போ இதை செய்து பாருங்கள்..

இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் சூழல் எற்பட்டுள்ளது.வேலையில் உள்ள பதற்றத்தால் சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர்.அது மட்டும் இல்லாமல் இரவிலும் வேலை செய்து விட்டு பகலில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை.இதனால் மனசோர்வு,மன அழுத்தம் ஆகியவையில் சிக்கி தவிக்கின்றனர்.ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும்.அப்பொழுது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.இரவில் சரியான தூக்கத்திற்கு சில குறிப்புகளை காணலாம்.

தூங்க போவதுக்கு முன் சூடான பாலை தினமும் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

தினமும் ஒரு கப் நிறைய செர்ரிகளை சாப்பிட்டால் அதில் உள்ள மெலடோனின் சக்தி இரவில் சரியான நேரத்தில் தூங்க தூண்டுதலாக இருக்கும்.

ஆளிவிதைகளில் உள்ள பொட்டாசியம் மன அழுத்ததை குறைத்து சரியான தூக்கத்திற்கு உதவுகிறது.இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து உண்டு வந்தால் கூடிய விரைவில் பலன் கிடைக்கும்.

வாழைப்பழம் அதிக ஆரோக்கியத்தை உள்ளடக்கியுள்ளது.இதில் உள்ள மெக்னீசியம் போன்ற சத்தால் மலச்சிக்கல்,தூக்கமின்மை ஆகியவற்றை குணப்படுத்தும்.

பாதாமிளும் மெக்னீசியம் சத்தியுள்ளதால் தூக்கத்தை மேன்மைப்படுத்தும். தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால் இனிமையான தூக்கம் பெறுவீர்.

More News >>