கருமையான...அடர்த்தியான கூந்தலுக்கு இதை செய்து பாருங்கள்!!!

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மாசு படிந்த காற்றில் வாழ்வது..காற்றில் அதிக மாசு கலப்பதால் அவை நேராக சென்று நம் கூந்தலை பாதிக்கின்றது.இதனால் கூந்தலின் அடர்த்தி குறைந்து எலி வால் போல மாறுகிறது.இதையடுத்து பெண்கள் என்ன செய்வதென்று அறியாமல் ஏதோ ஒரு ஷாம்பை பயன்படுத்தி இன்னும் சிக்கலுக்குள் மாட்டி கொள்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு முடியை எப்படி அடர்த்தியாக வளர்க்க வேண்டும் என்பதை பகிர்ந்து உள்ளோம்..

நெல்லிக்காயின் நன்மை:-

நெல்லிக்காயில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால் முடியை உடையாமல் பாதுகாக்கிறது.தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அடர்த்தியான முடி வளரும்.அது மட்டும் இல்லாமல் இளநரையை முழுவதுமாக குணமாக்குகிறது. நெல்லிக்காயை மிக்சியில் அரைத்து தலை முடியில் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடி கருமையாக வளரும்.

சீயக்காயின் நன்மை:-

கெமிக்கலால் நிறைந்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையால் தயாரிக்கப்பட்ட சீயக்காயை பயன்படுத்துங்கள்.இதனின் தன்மை தலையில் ஊறி புதிய முடிகளை வளர தூண்டுகோளாகவும் மற்றும் முடியை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.

வீட்டிலேயே இயற்கையான சீயக்காயை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்..

ஒரு பாத்திரத்தில் 6 பூந்திகொட்டை 6 சீயக்காய் மற்றும் நெல்லிக்காய் இவற்றை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதை அடுப்பில் வைத்து சுடுபடுத்தி கொள்ள வேண்டும்.

அடுத்து அதை ஆறவைத்து மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவேண்டும்.

இதனை பயன்படுத்தி கூந்தலை அலசினால் முடி கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருக்கும்.

More News >>