`கோலி ஒரு கோமாளி!- சர்ச்சை கிளப்பும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, `களத்தில் கோமாளி போல் நடந்து கொண்டார்’ என்று தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பௌல் ஹாரிஸ் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில், தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

மேலும், களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து, ஒழுக்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவும் அடுத்தடுத்து போட்டிகள் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெறும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், `ரபாடாவுக்கு போட்டிகள் விளையாடுவதில் தடை விதிக்கப்பட்டால், மற்றவர்களையும் அதைப் போலவே கடுமையாக நடத்த வேண்டும்.

கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளின் போது கோமாளி போல் நடந்து கொண்டார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐசிசி அமைப்புக்கு ஒன்று ரபாடாவைப் பிடிக்கவில்லை அல்லது தென்னாப்பிரிக்காவையே பிடிக்கவில்லை’ என்று கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>