நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் அருகில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொது மக்கள் சாலையை கடக்க அச்சமடைந்து இருந்தனர்.
இதனால், பொது மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக, சாலையின் குறுக்கே நடந்து செல்வதற்காக நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் சிக்கின.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிலர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com