ராம்கோபால் வர்மா ஓய்வுபெற வேண்டும் - ராதிகா ஆப்தே பளீர்
ராம்கோபால் வர்மா இயக்குநராக ஓய்வுபெற வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தேவை இயக்குநர் ராம்கோபால் வர்மா தான் தெலுங்கில் ரத்த சரித்திரா [தமிழில் ரத்த சரித்தரம்] திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படத்திலு, ரஜினியின் கபாலி திரைப்படத்திலும் நடித்தார். தற்போது, பாலிவுட் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா ஆப்தே கலந்துகொண்டார். அப்போது, தெலுங்கில் ஓய்வுபெற வேண்டிய இயக்குநர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘ராம்கோபால் வர்மா’ என்று கூறினார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே ஓய்வுபெற சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com