பி.எம் கிசான் முறைகேடு : கோடிக்கணக்கில் மோசடி...!
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருச்சி , கரூர் , மதுரை , விழுப்புரம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூபாய் 2000 வீதம் 6000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் மேற்கூறிய மாவட்டங்கள் உட்பட முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் போலியாகப் பல பயனாளிகளை இணைத்துப் பல கோடி மோசடி நடந்துள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆயிரம் போலி விவசாயிகள் கணக்கில் 2 தவணையாக ரூபாய் 4000 செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி 11200 விவசாயிகள் கணக்கில் இருந்து ரூபாய் 4.40 இலட்சம் திரும்பப் பெறப்பட்டது.இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து 3 கோடி போலி பயனாளர்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 28000 போலி பயனாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர் அவர்களிடம் இருந்து ரூபாய் 18 கோடி திரும்பப் பெறப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.