தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பு !

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான விளம்பர்ஙகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது . மேலும் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளை இது சம்பந்தமாக பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் தொலைதூரக்கல்வி மூலம் மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அண்ணாமலை பல்கலைகழகம் விளம்பரம் வெளியிட்டது.

இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் விளம்பரம் வெளியிட்டதை ரத்து செய்யுமாறும் , இந்த படிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டங்களை திரும்ப பெற உத்தரவிடுமாறு கோரியும் வைக்கப்பட்டுள்ளது.

2008 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டக் கல்வி விதிகளின் படி தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பு முடிப்பவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யமுடியாது .

இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .அவர்கள் இது சம்பந்தமாக மத்திய , மாநில மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More News >>