2ம் தலைமுறை நடிகருக்கு காதலுடன் பிரபல நடிகை சொன்ன வாழ்த்து ..
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்த சமந்தா பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ படங்கள் அவருக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தன. தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து மணந்தார். கோவாவில் 2017ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. நாகசைதன்யா வளர்ந்து வரும் நடிகராக இருந்த நிலையில் சமந்தாவை மணந்த பிறகு ஸ்டார் அந்தஸ்த்து கூடியது.தெலுங்கில் ஜோஷ் படத்தில் நடித்த நாக சைதன்யா அப்பட வெளியீட்டிற்குப் பிறகு, கவுதம் மேனனின் ஏ மாயா சேசாவ் படம் மூலம் மற்றொரு இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் அவர் நடித்த மஜிலி, சவ்யாசாச்சி மற்றும் ரராண்டோய் வேதுகா சுத்தம் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பைப் பெற்றன. நாக சைதன்யா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் மற்றும் நாகேஸ்வரராவின் பேரன் ஆவார். அதாவது நாகேஸ்வரராவ் குடும்பத்தில் 3வது தலைமுறை நடிகர். சைதன்யா அக்னேனி திரையுலகுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர். 2009 ம் ஆண்டில் ஜோஷ் படத்தில் நாக சைதன்யா நடித்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அது வைரலாகி வருகிறது.கணவரும் தனது ஜோடி நடிகருமான நாக சைதன்யாவுக்கு சமந்தா 11 ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து கூறினார். அவர் கூறும் போது "11 ஆண்டுகள் நிறைவு செய்யும் சைதன்யா அக்கினேனிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தை என்ணும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இன்னும் பிரகாசிக்க என்னுடைய பிரகாசாமான ஹீரோவுக்கு ல்வ்வுடன் கூடிய வாழ்துக்கள்" என தெரிவித்திருக்கிறார்.
சைதன்யா தற்போது வரவிருக்கும் படமான லவ் ஸ்டோரி படப்பிடிப்பை மீண்டும் தொடங்க காத்திருக்கிறார், இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். அவரது மற்றொரு படம், தேங்க் யூ, முன் தயாரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.