வந்துவிட்டது அரிசிக்கும் ATM

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கூட பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தின் மிக பெரிய நம்பிக்கை ரேஷன் கடை எனும் பொது விநியோக திட்டம் தான் .

இந்த திட்டத்தின் மூலம் அரசு பல்வேறு நல திட்டங்களை வறுமையில் வாழும் மக்களுக்கு அவர்வர் இடத்திற்கு கொண்டு சேர்க்க இந்த பொது விநியோக திட்டம் பயன்படுகிறுது. இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் இன்றும் நடைமுறைபடுத்துகிறது.

இந்த திட்டத்தில் அரிசி , பருப்பு , எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது . இதனை ரேஷன் கடை மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் இந்த செயல்பாடுகள் பெரும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்து கின்றன.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க கர்நாடக அரசு ஒரு திட்டத்தை நடைமுறை படுத்த உள்ளது. அந்த திட்டம் தான் அரசி ATM , பணம் எடுக்க ATM இயந்திரம் உள்ளது போல அரிசி வாங்கவும் ATM இயந்திரத்தை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.

இந்த கொரோனா நெருக்கடியில் சமுக இடைவெளி பின்பற்ற இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . எனவே கர்நாடக அரசாங்கம் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் நடைமுறை படுத்தப்பட உள்ளதாக கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.கோபால்லய்யா தெரிவிதுதுள்ளார்.

முதற்கட்டமாக இந்த திட்டம் இரண்டு இயந்திரங்களின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது . இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 500 மற்றும் 1000 கிலோ அரிசியை உள்ளடக்கம் கொண்டது .

மேலும் அனைத்து விதமான குடும்ப அட்டைகளையும் சிப் வைக்கப்பட்ட டிஜிட்டல் அட்டையாக மாற்றம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கர்நாடக அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள, குடிநீர் ஏடிஎம்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் கர்நாடகா முழுவதும் 1800க்கும் மேற்பட்ட குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>