முகம் வெள்ளையாக,வெண்மை பாலில் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி??
முகம் பொலிவு பெற:-
பாலில் விலை உயர்ந்த ஆரோக்கிய குணங்கள் உள்ளது.பால் சருமங்களில் பொலிவை மேன்மை படுத்தி முகத்தை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் வளரும்..சரி வாங்க பாலில் எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வது என்று பார்ப்போம்..
பாலில் 5 பாதாம்,5 பேரிச்சம்பழம் பாலில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து ஊறவைத்த பாலினை மிக்சியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை முகத்தில் தேய்த்து 15 முதல் 20 வரை ஊறவைக்க வேண்டும்.
பின்பு நன்கு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் முகம் பொலிவில் ஜொலிக்கும்..
முகம் மென்மை பெற:-
முதலில் பச்சை பாலில் எலுமிச்சை சாறு,ரோஸ் நீர் சேர்த்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு மிதமான தண்ணீரில் கழுவினால் மென்மையான சருமம் பெறுவீர்கள்.
சருமம் ஈரப்பதம் பெற:-
ஓரு பாத்திரத்தில் கடலை மாவு,பச்சை பால் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் தேன்,ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்பு நீரில் கழுவினால் முகம் எப்பொழுதும் ஈரப்பதமாக விளங்கும்.