மருத்துவமனையிலிருந்து எஸ்.பி.பி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்? வீட்டிலேயே சிகிச்சை தொடர திட்டம்..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முன்னதாக சிகிச்சை முடிந்து சீக்கிரம் வந்துவிடுவேன் யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வீடியோவில் பேசி விட்டுச் சென்றவர் அடுத்த சில நாட்களில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உயிர்காக்கும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க, பிரிட்டன் டாக்டர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மருத்துவனை டாக்டர்கள் கலந்தாலோசித்து எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் எஸ்பிபி குணம் ஆக வேண்டித் திரைத் துறையினர், ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து அவருக்காகப் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எஸ்பிபி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் 95 சதவீதம் அவரது உடல்நிலை தேறி இருக்கிறது. சுயநினைவுடன் இருக்கிறார் என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்தார். மேலும் வரும் திங்கட் கிழமை எஸ்பிபி பற்றி ஒரு நல்ல செய்தி வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

எஸ்பிக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகி குணம் அடைந்திருப்பதாகக் கூறப்படுவதுடன் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இன்று வீடு திரும்புவார், வீட்டிலிருந்தபடி மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.இதற்கிடையில் எஸ்பிபிக்கு கடந்த 5ம் தேதி திருமண நாள். இதையடுத்து அவரது மனைவி சாவித்ரி கணவரை காண மருத்துவமனைக்கு சென்றார். ஐசியு அறையில யே கேக் வரவழைத்து அதை எஸ்பிபியும் மனைவியும் இணைந்து வெட்டி திருமண நாள் கொண்டாடினார்கள். படுக்கையிலிருந்தபடியே எஸ்பிபி கேக் வெட்டியது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்ததாம்.

More News >>