போதை மருந்து கடத்தலில் கைதான பிரபல நடிகை பா.ஜ உறுப்பினரா? தேர்தலில் கட்சிக்கு பிரசாரம் செய்த வீடியோ, புகைப்படங்களால் பரபரப்பு..

பெங்களூருவில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர் அவர்கள் தந்த தகவல் அடிப்படையில் நடிகை ராகினி திவேதியை போலீசார் கைது செய்தனர். இவர் தமிழில்,நிமிர்ந்து நில்; படத்தில் நடித்ததுடன் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகிறது.ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஆசாமி போதை மருந்தை கடத்தி வந்து அதை உள்ளூர்க்காரர்கள் மூலமாக விற்பனை செய்ததும் அம்பலமானது. இந்நிலையில் கைதான நடிகை ராகினி திவேதி பா ஜ கட்சியைச் சேர்ந்தவர், கடந்த தேர்தலில் அக்கட்சிக்காகப் பிரசாரம் செய்தார் என்று தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பாஜவுக்காக பிரசாரம் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக மாநில அமைப்பாளர் ஏ.எச் ஆனந்த். இணை அமைப்பாளர் பி.என் ராகவேந்திரா ஆகியோர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு (2019) நடைபெற்ற தேர்தலில் பல்வேறு நடிகர், நடிகைகள் பாஜகவிற்காகப் பிரச்சாரம் செய்தனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகினி. அவர் பாஜக உறுப்பினர் அல்ல. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாஜகவுக்குப் பிரச்சாரம் செய்தார். அவருடைய சொந்த பிரச்சனைகளில் பாஜக தலையிடாது. அதுமட்டுமின்றி இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு எப்போதும் பாஜக ஆதரவு தருவதில்லை. எனவே ராகினி திவேதியை காப்பாற்றும் முயற்சியோ, அவருக்கு ஆதரவாகவோ பாஜக ஈடுபடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

More News >>