போன வாரம் சரிவில் இருந்த பங்குகள் இந்த வாரம் மீளுமா ?

கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர்.கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.8 சதவீதமும் நிஃப்டி 2.7 சதவீதமும் குறைந்து சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.இதற்குக் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் காரணிகளானஇந்திய , சீன எல்லை பிரச்சினை ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அதன் தாக்கம் பங்குச் சந்தையிலும் எதிரொளித்தது.மற்றும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத பட்சத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிகழ்கின்றன.

மேலும் பொது முடக்கத்தின் போது ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட தவணை கால நீட்டிப்பு வழக்கும் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.எனவே கடந்த வாரம் மீட் கேப் மற்றும் ஸ்மால் கேப் முறையே 2.8 மற்றும் 2.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.இந்த வாரம் சந்தைக்கான சாதகமான சூழ்நிலை நிகழ்வதால் பங்குச் சந்தை மீள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது .வரும் செப்டம்பர் 10 ல் பொது முடக்கக் காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டி தள்ளுபடி மீதான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இது சந்தையிலும் எதிரொலிக்கும்.

மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கவேண்டிய நிலுவைத்தொகை மீதான வழக்கிலும் நிறுவனங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதால் வங்கி பங்குகள் உயர வாய்ப்புள்ளது.எனவே சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது இலாபகரமாக இருக்கும்.

More News >>