டெல்லியில் துப்பாக்கி சண்டை நடத்தி 2 தீவிரவாதிகள் கைது..
டெல்லியில் 2 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய போலீசார், அவர்களை மடக்கி கைது செய்தனர்.
வடமேற்கு டெல்லியில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலையில் போலீஸ் சிறப்பு படையினர் அந்த இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கிய இடத்தை நெருங்கியதும் அவர்கள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சரமாரியாக சுட்டனர்.
சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்கு பின் 2 தீவிரவாதிகளையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். பூபேந்தர்சிங், குல்வந்த் சிங் ஆகிய 2 பேரும் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பல வழக்குகளில் சிக்கிய அவர்களை பஞ்சாப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இருவரையும் டெல்லி போலீசார் பிடித்துள்ளனர்.