ரூபாய் 15000 ஆரோக்கிய காப்பீடு - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயன்படும் ஆவாஸ் காப்பீடு திட்டம்...!

ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இந்த திட்டம் கேரளா மாநிலத்தால் உருவாக்கப்பட்டது .இந்த திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் இறப்பு சார்ந்த காப்பீடாகும். இந்த திட்டம் நவம்பர் 2017 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தொடக்கமான பதிவு டிசம்பர் 2017 ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் மாநிலங்களுக்கு இடையிலான ஐந்து இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை திட்டத்தின் கீழ் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள்

குறைந்தபட்சம் 18 வயது முதல் 60 வரை உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் இணையும் போது தொழிலாளர்களின் கைரேகை , கருவிழி மற்றும் தொழில் சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து ஆவாஸ் காப்பீடு அட்டையை பெறலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம்.

பயன்கள்

ரூபாய் 15000 ஆரோக்கிய காப்பீடாக கிடைக்கும். இதன் மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். விபத்தின் மூலம் இறப்பு ஏற்பட்டால் அதற்கான காப்பீடாக 2 இலட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதனை பெற ஆவாஸ் காப்பீடு அட்டையை மருத்துவமனையில் பயன்படுத்தலாம்.

2013 ன் கணக்கெடுப்பின்படி கேரளாவில் 25 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது ‌. மேலும் ஆண்டிற்கு 2.35 இலட்சம் தொழிலாளர்கள் கேரளாவை நோக்கி புலம்பெயர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்ட தொழிலாளர் அமைப்பால் பதிவு செய்யப்படும் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. எனவே கேராளாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

More News >>