திரும்ப வந்துட்டோமுனு சொல்லு.. சென்னை அணியின் கெத்து வீடியோ!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. எல்லா அணிகளும் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை அணி வீரர்கள் உற்சாகமாகச் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அதே உற்சாகத்தில் துபாயும் கிளம்பிச் சென்றனர். அங்கு தான் வினை ஆரம்பித்தது. சென்னை பயிற்சியினால், 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பின்னர் இவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டனர். இது ஒருபுறம் இருக்க, சென்னை அணியின் முக்கிய தூண்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களுக்காக அணியில் இருந்து விலகி நாடு திரும்பினார்.இதே காரணங்களுக்காக, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜனும் சிங்கும் இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார். இது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சென்னை அணிக்குப் பின்னடைவே இல்லை என்று தெம்பூட்டியுள்ளது அணி நிர்வாகம். சமீபத்தில் பேசிய சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ``தலைவன் தோனி இருக்கும் வரையில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அணி பலமாகவே இருக்கிறது.

அணி குறித்து எந்த கவலையும் இல்லை. எங்கள் அணிக்குத் திறமையான கேப்டன் இருக்கிறார். அவர் இதற்கு முன்பே இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு சமாளித்துள்ளார். தலைவன் தோனி அணியைப் பார்த்துக்கொள்வார். நேற்றில் இருந்து வீரர்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். வீரர்கள் அனைவரும் துடிப்புடன் இருக்கிறார்கள்" என்று நம்பிக்கை வரிகளை உதிர்த்திருக்கிறார். இவர் பேசிய சில மணி நேரங்களில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை அணி நிர்வாகம் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. தற்போது பதிவிட்டுள்ள வீடியோவில் தோனி தலைமையில் வீரர்கள் கெத்தாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

More News >>