எப்போது வேண்டுமானாலும் கொரோனா தாக்கலாம்.. ஷிகர் தவான் அதிர்ச்சி!

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் மேட்சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டாலும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்று மட்டுமே பேச வேண்டும் என்று விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சென்னை அணி வீரர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி அதிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி வீரர் ஷிகர் தவான் தனது நிலை குறித்துப் பேசியுள்ளார். அதில், ``இந்த சூழலில் ஐபிஎல் விளையாடுவதைப் பற்றி நான் ஒருபோதும் பயப்படவில்லை. என் உடல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை நாங்கள் 8-9 முறை கொரோனா பரிசோதனை செய்துவிட்டோம். என்றாலும், எனக்கு எப்போது வேண்டுமானாலும் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால் என்னால் அதை எதிர்த்து போராட முடியும். நிச்சயம் நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More News >>