டீ குடித்தால் எடை குறையுமா ?

கொஞ்சம் களைப்பாக உணர்ந்தால் தேநீர் அருந்துகிறோம். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்தபடி தேநீர் அருந்துவது மிகவும் ரசிக்கத்தக்க அனுபவம். ஆனால், வெறுமனே உற்சாகத்தை தருவதோடு உடல் எடை குறையவும் டீ உதவுகிறது என்றால் அது ஆச்சரியத்திற்குரிய விஷயம் அல்லவா!

எளிதாக கிடைக்கக்கூடிய மூன்றே மூன்று பொருள்களை சேர்த்து மூலிகை டீ தயாரித்து தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

மூன்று மூலிகைகள்

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இஞ்சை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று தெரிய வந்தது. எடையை குறைக்கும் மூலிகை டீயில் சேர்க்கவேண்டிய இன்னொரு பொருள், ஓமவிதை. ஓமவிதை உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது; செரிமான கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலுமிச்சைக்கும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய இயல்பு உண்டு. உடல் எடை குறைவதற்கு எலுமிச்சை தண்ணீர் அருந்துவது காலங்காலமாக இருக்கும் பழக்கமாகும்.

தேவையானவை

சிறிது இஞ்சி (அரை அங்குல அளவு), எலுமிச்சை 1, ஓம விதை 1 தேக்கரண்டி, நீர் 1 தம்ளர்.

மூலிகை டீ

ஒரு தேக்கரண்டி அளவு ஓமவிதையை இரவில் தண்ணீரில் ஊற போடவும். காலையில் அந்த நீரை பாத்திரத்தில் வைத்து, சீவிய இஞ்சியை போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்த பின்னர் வடிகட்டி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம். இனிப்புக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கலாம்.

தினமும் காலையில் வழக்கமாக குடிக்கும் தேநீர் அல்லது காஃபிக்கு பதிலாக இந்த மூலிகை டீயை அருந்தி வந்தால், காலப்போக்கில் உடல் எடையில் மாற்றத்தை காணலாம்.

More News >>