பொது நல வழக்கு தொடுத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் .E.பாலகுருசாமி மேலும் இவர் மத்திய தேர்வாளர் ஆணையம் மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து மீதான ஒரு பொது நல வழக்கைப் பதிவு செய்துள்ளார்.அந்த மனுவில் அரசு ஆகஸ்டு 26 ல் வெளியிட்ட அனைத்து மாணவர்களின் தேர்வு ரத்து ( கலை மற்றும் அறிவியல் , பொறியியல் , கணினியியல் முதுநிலை )என்ற அறிவிப்பு சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வியின் தரத்தையும் , பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பாகவும் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார் . அரசின் இந்த அறிவிப்பு சிறப்பாகப் படித்துத் தேர்வெழுதிய மாணவர்களின் திறனைக் குறைப்பதாகவும் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கல்வியின் தரத்தையும் , பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மையையும் குறைக்கும் என்றும் பல மாணவர்கள் 25 அரியருக்கு மேல் வைத்திருப்பதாகவும் அவர்கள் 25% மதிப்பெண்ணிற்குக் கீழாகப் பெற்றவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பாக இந்த அறிவிப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தேர்வில் பங்கேற்பது மாணவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் , அவர்களின் திறனையும் வளர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலகுருசாமி கூறுகையில் பல்கலைக்கழகம் தன்னிச்சையானது அது செனட் மற்றும் மற்ற குழுக்களால் நிர்வகிக்கப்படுகிறது என்றும் இதில் மாநில அரசு தலையிடுவது அதன் பாரம்பரியம் மற்றும் தரத்தைக் குறைக்கும் என்றார்.மேலும் இது தொடர்பாகத் தொழில்நுட்ப கவுன்சில் அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறாவிட்டால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் அரியர் மாணவர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

More News >>