காமத் குழுவின் பரிந்துரை !

கொரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் மறு சீரமைப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாகப் பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளர் கே‌.வி‌.காமத் தலைமையிலான குழுவை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அமைத்தது.அந்த குழு வழங்கிய பரிந்துரையைக் கடந்த திங்கட்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டது.அதன்படி கட்டுமானம் , சாலை மேம்பாடு , எஃகு வணிகம் , மனை வணிகம் , மொத்த வியாபாரம் , ஜவுளி , ரசாயனம் , நுகர்வோர் பொருட்கள் , எஃகு அல்லாத உலோகம் , மருந்து உற்பத்தி , சரக்கு போக்குவரத்து ,ஆபரண கற்கள் மற்றும் நகைகள் , சிமெண்ட் , உணவகங்கள் , சுற்றுலா , சுரங்கம் , பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு , வாகன தயாரிப்பு , வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து உட்பட 26 துறைகளுக்குக் கடன் மறு சீரமைப்பு திட்டத்தை அமல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

அதன்படி 2020 மார்ச் 1 ம் தேதி நிலவரப்படி , வாராக்கடனாக அறிவிக்கப்பட்டு 30 நாட்கள் கடந்திராத கடன் கணக்குகளைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்திற்குத் தகுதியானவை.1500 கோடிக்கும் அதிகமான கடன் மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கடன் மறு சீரமைப்பு திட்டம் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மதிப்பீடு மேற்கொள்ளப்படாத நிறுவனங்களுக்கு வங்கிகளே மதிப்பீட்டை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கடன் மறு சீரமைப்பு திட்டமானது நடப்பாண்டின் டிசம்பர் 31 ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.பின்னர் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

More News >>