ரியா சக்ரபோர்த்தியை கைது செய்த போதை தடுப்பு போலீசார் .. சுஷாந்த் காதலி சிறை செல்கிறார்..
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ரியாவின் தம்பிக்கும் போதை மருந்து கூட்டத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரியாவும் போதை மருந்து விவகாரத்தில் தொடர்பு இருப்பதால் அவர் மீது வழக்குப் பதிந்து போதை தடுப்பு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இதுகுறித்து ரியா சக்ரபோர்த்தி , ஒருபோதும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை, ஆனால் ஒரு வருடமாக டேட்டிங் செய்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை அதிலிருந்து தடுத்து நிறுத்த முயற்சித்தேன் என்று கூறினார். சுஷாந்த் ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட 2 பேரைப் போதைப் பொருள் வாங்குவதற்கு ரியா பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கூறுகிறது.ரியா மற்றும் ஷோயிக் சக்ரபோர்த்தியின் உத்தரவின் பேரில் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே மொத்தம் 165 கிராம் கஞ்சாவை வாங்கி இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விற்பனையாளர்களிடமிருந்தும் 59 கிராம் க்யூரேட்டட் மரிஜு வானாவைக் கைப்பற்றியதாகவும் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போதை மருந்து வாங்கிய விவகாரத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.இதற்கிடையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பணத்திற்காகச் சுரண்டப்பட்டார், மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டார் மற்றும் அவரது மரணத்தில் முக்கிய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் ரியா சக்ரவர்த்தியை மூன்று மத்திய நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.