சிரியாவில் தாக்குதல் எதிரொலி: ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
சிரியாவில் நடந்து வரும் உச்சகட்ட தாக்குதல் எதிரொலியால் ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயங்கவாதிகள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளனர். இதில், ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இந்த போர் கலவரத்தில் பொது மக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர். இதேபோல், கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இதன்மூலம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் பேர் தங்களது உடமைகளை விட்டு, உயிருக்கு பயந்து வெளியேறி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com