அழுகாமல் இருக்கும் 2600 ஆண்டுகளில் வாழ்ந்த பெண்ணின் சடலம்

நம் முன்னோர்கள் வாழ்ந்த தடயம் யாவும் பூமியில் புதைந்து உள்ளது.அதனை கண்டுபிடிக்கும் வகையில் 1993 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நிகழ்ந்த ஆராய்ச்சியின் உண்மையான சம்பவம்.ரஷ்யாவில் மிகவும் குளிர்மையான பகுதி சைபிரியன்.அப்பகுதியில் ரஷ்யாவின் பழமையை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.அப்பொழுது யாரும் எதிர்பாராத நொடியில் பூமியில் இருந்து பெரியளவில் ஒரு மரப்பெட்டி எடுக்கப்பெற்றது.அதை திறந்த அடுத்த நொடியே அங்கிருந்த மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!!அம்மரப்பெட்டியில் அழுகாமல் ஒரு பெண்ணின் சடலம்,நான்கு குதிரை எலும்பு கூடுகள் மற்றும் இளமை குறையாத ஆண் மகனின் எலும்பு கூடும் இருந்துள்ளது.அப்பெண் சடலத்தை ஆராயும் பொழுது தான் அவர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது தெரிய வந்தது.அப்பெண் எதோ கொடிய நோயினால் போராடி உயிர் மாய்ந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அவருக்கு அகவை முப்பது நிறைவு அடையும் பொழுது இறந்திருக்க வேண்டும் என்று கணிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

அப்பெண்ணின் உயிர் பிரிந்து சுமார் 2600 வருடங்கள் ஆகி இருந்தும் எப்படி அவரின் சடலம் கெடவில்லை என்பது எல்லோரின் மனதில் எழும்பும் முதற் கேள்வி?? ரஷ்யா நாட்டின் முறைப்படி இறந்தவர்கள் ஒரு ராணியாக இருந்தால் அவர்களின் உடலை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், சவ பெட்டியில் படர்ந்து காணப்படும்.இதனால் இறந்தவர்களின் உடல் பதபடுத்தபடுகிறது.ரஷ்யாவின் மரபை சற்றும் மாற்றாமல் இனி வரைக்கும் அப்பெண்ணின் உடலை பாதுகாக்கின்றனர்.

More News >>