“அற்புதமான குறும்படம்” - இயக்குனரைப் பாராட்டிய அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ
திருநெல்வேலி படத்தில் தொடங்கி விஜய் நடித்த தலைவா படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் உதயா. இவர் முதன்முறையாக செக்யூரிட்டி என்ற குறும்படத்தி இயக்கி வெளியிட்டார். இதில் 65 வயது கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். செக்யூரிட்டி படம் பற்றி கூறும்போது:
அனைவருக்கும் வணக்கம். நான் நடித்து முதல் முறையாக இயக்கி வெளிவந்த குறும்படம் " செக்யூரிட்டி " இணைய தளத்தில் வெளிவந்து அனைவரும் பாராட்டப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டி ருக்கிறது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட துரிதமாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப் பணமாக எடுத்துள்ள இந்த குறும்படத்தை இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, படத்தைப் பார்த்து என்னையும் என் குழுவினரையும், பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வாழ்த்துக் கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். என் முதல் முயற்சிக்கு, ஊக்கம் கொடுத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் உதயா கூறி உள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது வாழ்த்து கடித்தத்தில். அன்பு மிகுந்த தம்பி நடிகர் இயக்குனர் உதயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் செஜ்யூரிட்டி குறும் படம் பார்த்து மிகவும், மகிழ்ந்தேன் அருமையான தேவையான தேசப் பற்றுள்ள படம். குறிப்பாக நம் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்று கிறது உங்கள் படம். படத்தில் மறைந்த நம் இந்திய வீரர் பழனியின் தியாகத்தை யும், இளைஞர்கள் எதை ஷேர் செய்ய வேண்டுமென்று அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நடித்த அனைவருக்கும் முதல்முறையாக 65 வயது முதியவராக அற்புதமாக நடித்த உங்களுக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறார்.