இந்தி திணிப்பெல்லாம் இருக்கட்டும் - இந்தி வரலாறு தெரியுமா உங்களுக்கு?

சமீபத்தில் #இந்திதெரியாதுபோடா என்ற ஹேஸ்டேக் பிரபலமானதையடுத்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்தி ஆதரவாளர்கள் பகிர்ந்து வரும் வேளையில், சிலர் "கொடுக்கற காசுக்கு மேல கூவுறான்டா கொய்யாலே " எனும் லிவிங்ஸ்டனின் சினிமா வசனம் போல இந்தி மொழிக்கு முட்டு கொடுப்பதை பார்க்க முடிகிறது. தமிழ் மொழியை சைட் கேப்பில் ஓரங்கட்டுவதையும் கண்கூட பார்க்க முடிகிறது. அப்படி இந்தி மொழியில் அருமை பெருமை என்ன தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல், இந்தியை புறந்தள்ளுவது சரியல்ல.

அதன் அருமை பெருமைகளை அறிந்து கொண்டால், இந்திய தேசத்தில், இந்த மொழி எப்படி ஆலமரமான தமிழ் மொழியையும், திராவிட மொழிகளையும், வங்காள மொழியையும் ஓரங்கட்ட எத்தனிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு மொழியின் பாரம்பரியத்தையும், அதன் தொன்மையும், அம்மொழியின் இலக்கியங்களை வைத்து தான் அளவிடல் வேண்டும். அந்த வகையில் இந்தி இலக்கிய வரலாற்றை ஆதி காலம், பக்தி காலம், ரிதி காலம், அதுனிக் காலம் என பிரிக்கலாம். இதில் அந்த மொழி உருவாகி இலக்கிய வடிவு அடைந்தது எல்லாம் 10 - 14 ஆம் நூற்றாண்டுகளில் தான்.

அதன் ஆதி இலக்கியங்கள் மத அடிப்படை நூல்களாகவும், " ரசோ "என்ற வகையில் ரஜபுதான வீரர்களின் புகழ் பாடும் அதீத இச்சை நிறை வரிகள் கொண்ட இலக்கியங்களாகவே இருந்தன. இந்தியின் புகழ்பெற்ற "தோஹா " பாடல்கள் இந்த காலத்தில் உருவானவை தான். அதன் பின்பு பக்திகாலத்தில் கபீர், குருநானக் போன்றோர் இந்தி இலக்கியத்தை பொடனியில் அடித்து பக்தியின் பக்கம் இழுத்து வந்தனர். சரியான இலக்கண அமைப்பு இல்லாத மொழி என்பதால், ரிதி காலத்தில் இந்த மொழியில் வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியின் கலப்பு ஏற்பட்டது.

அதன்பின் ஹரிவன்ஸ்ராய் பச்சன், மஹாதேவி வர்மா போன்ற ஒரு சில எண்ணி எடுக்கும் அளவிலான அறிஞர்கள், இந்த மொழியின் இலக்கியத்தை தற்போதைய நிலைக்கு அழைத்து வந்துள்ளனர். கற்பதற்கு இலகுவாக இருப்பதால் வழக்கொழிந்த சில தேசிய மொழி இனங்கள் இந்தியை தத்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியாவில், நாட்டின் மத்திய பகுதிகளில் தெய்வாதீனமாக அமைந்ததால் இந்தி இந்திய தேசத்தின் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டதே தவிர, இந்தி தேசிய மொழி அல்ல. இவ்வளவு தான் இந்தி மொழி வரலாறு.

இந்த மொழி தான் கிறிஸ்து பிறப்பிற்கு 300 வருடங்களுக்கு முன் சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழுக்கு முன் வாலாட்டுகிறது. இப்படி ஒரு பத்தியில் தமிழ் மொழியின் வரலாற்றை பதிவிடுபவருக்கு நமது சொத்தை தாராளமாக எழுதி வைக்கலாம்......நம் சொத்துக்கு தமிழே அரண். வெறுப்பை திணித்து குழந்தையின் வாயில் துறுத்தப்படும் உணவு காரி உமிழப்படுவது இயற்கை.

More News >>