சென்னையில் மிதமான மழை
சென்னையில் இன்று அதிகாலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தென் கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது போல், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதன் எதிரொலியாக, இன்று அதிகாலை சென்னையிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com