நடிகை கங்கனா பங்களாவின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.. மும்பை மாநகராட்சி நடவடிக்கை..

பாலிவுட் நடிகையும் ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தில் நடித்து வருபவருமான கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப் பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினர் கங்கனா. இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா ரனவத்தை கண்டித்ததுடன் அவர் மீது தேச துரோக வழக்கு தொடர் வேண்டும் என்றார்.

இமாசல பிரதேசம் மனாலியில் தங்கி யுள்ள கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்தநிலையில் பாந்த்ரா, பாலிஹில்லில் உள்ள கங்கனா வின் பங்களா வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி கங்கனா பங்களா கட்டிடத்தின் முகப்பில் நோட்டிஸ் ஒட்டியது. பங்களாவில் உள்ள ஒரு பகுதியை அவர் அலுவலகமாக மாற்றி படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டியதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

கங்கனாவின் வக்கீல், கங்கனா வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடக்கவில்லை. அதிகாரிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கங்கனாவை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

கங்கனா தரப்பில் உரிய பதில் அளிக்காத தால் இன்று காலை 11 மணியளவில் மும்பை மாநகராட்சி மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதை தொடர்ந்து இன்று 12.30 மணிக்கு கங்கனா ரனாவத் பங்களாவின் ஒரு பகுதி இடிக்கப் பட்டது. அப்பகுதியில் மக்கள் திரண்டனர். கங்கனா ரசிகர்கள் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

More News >>