நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்: தேசிய கீதத்தில் திருத்தம் ?

தேசிய கீதத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பியும் அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான ரிபுன் போரா நேற்று நாடாளுமன்ற மேல்-சபையில் தனி நபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

தீர்மானத்தில் அவர் கூறியிருப்பது:

நமது தேசிய கீதத்தில் சிந்து என்ற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக வடகிழக்கு என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் "நம் தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள சிந்து என்ற வார்த்தை எதிரி நாடான பாகிஸ்தானில் அங்கம் வகிப்பதாகவும் நமது வடகிழக்கு மாநிலங்களை குறிப்பிடும் எந்த சொல்லும் இல்லை என்றும் எதிரி நாட்டில் உள்ள ஒரு இடத்தை நாம் ஏன் தேசிய கீதத்தில் புகழ வேண்டும்? அதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்றும் கூறினார்.

"மேலும் 1950ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டிற்கு தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளபட்டது. அப்போது அவர் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் தேசிய கீதத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்" என்று ரிபுன் போரா சுட்டிக்காட்டினார்.

ரிபுன் போராவின் இந்த தனி நபர் தீர்மானம் நாடாளுமன்ற மேல்-சபையில் அடுத்த வாரம் எடுத்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>