தங்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெறலாம் - உதவி எண்ணை வெளியிட்ட அமைச்சர்..!
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் திங்கட்கிழமை அன்று மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட " கிரண் " உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் ' மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட கிரண் என்ற பெயரில் 18005990019 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
இந்த எண்ணை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எவரும் வீட்டில் இருந்தவாறே தங்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெற முடியும். இந்த உதவி எண் அனைத்து நாட்களிலும் 24*7 நேரமும் செயல்படும் .
இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் மனநல பிரச்சினைகளுக்கு எங்கு சிகிச்சை பெற முடியும். எந்த வகையான சிகிச்சை வழங்கப்படும் போன்ற தகவல்களை பெறலாம்.
தற்போது 13 மொழிகளில் பதில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் பல மொழிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.