இனிப்பான கற்கண்டில் இப்படி ஒரு நன்மை இருக்கா??தெரியாமல் போச்சே...சரி வாங்க பாக்கலாம்...

இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும்.கல்யாணம்,காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள்.இப்படிப்பட்ட கற்கண்டில் ஒரு நன்மை குணமும் உள்ளதாம்.ஆமாங்க அப்படி என்ன குணம் இருக்கும்??சளியுடன் இருமல் வரும் வேளையில் கற்கண்டை சாப்பிட்டால் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.கற்கண்டில் அதிக ஆரோக்கியம் நிறைந்துள்ளது.

இதனை ஆயுர்வேத மருத்துவத்திலும் கடைபிடிக்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது.குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அப்பொழுது அவர்கள் மருந்து கசக்கும் என்று சரியாக எடுத்துகொள்ள மாட்டர்கள்.அப்படிபட்ட நேரத்தில் இந்த இனிப்பான கற்கண்டை குடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். சளி மற்றும் இருமலும் உடனே சரியாகிவிடும்.

வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து இருமல் போன்ற பிரச்சனையில் இருந்து விடை பெற கற்கண்டு உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:-

இருமல் ஏற்பட்டால் தொண்டையில் கரகரப்பு ஏற்படும்.அப்பொழுது கற்கண்டு சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் பெறுவீர்கள்.

கற்கண்டு மற்றும் மிளகை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.தினமும் இரவு தூங்கும் முன் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சளி பிடிப்பதை முன்பே தவிர்த்து விடும்..

சளி பிடித்தால் மருந்து வாங்க கடை கடையா அலைவதை கைவிடுங்கள்.வீட்டில் உள்ள பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்.உடனடி தீர்வை பெறுங்கள்..

More News >>