யாரும் நெருங்க முடியாத ஆபத்தான தீவு-சென்டினல் தீவு

இந்த காலகட்டத்திலும் நமக்கு பழைமையான நினைவுகள் கிடைப்பது என்றால் நம் முன்னோர்கள் குறித்து வைத்த குறிப்புகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.இல்லையென்றால் பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்க்கை குறிப்புகள்,அவர்களின் அடையாளம்,வீர வாழ்க்கை,கொடைதன்மை முதலியவற்றை அவர்களுடனே புதைந்து போகியிருக்கும். பழங்குடினர் என்றாலே நமக்கு முதல் முதலில் நினைவுக்கு வருவது காட்டு வாசி நடையில் வாழ்ந்த இன மக்கள் தான்!....நாம் இங்கு காண போகும் செய்தியும் ஒரு ஒரு காட்டு வாசி இன மக்களின் கதை.

"யாரும் நெருங்க முடியாத ஒரு ஆபத்தான தீவு-சென்டினல் தீவு"

சென்டினல் தீவில் 400க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர் மக்கள் செம்மையான நிறத்தில் உள்ளதால் 'சென்டினல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.தீவினை சோதனை நடத்திய வல்லுநர்கள், இவர்கள் 60 வருஷங்களாக தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.இவர்களது தொழில், உயிரினங்களை வேட்டையாடுவது மட்டும் இல்லாமல் அது ஒரு பொழுதுபோக்காக நினைத்து செயல்பட்டுவருகின்றனர். இவர்களின் மொழி,வாழ்வு முறை,போன்றவற்றையெல்லாம் மர்மமான முறையில் இருக்கின்றது.1896 -யில் அந்தமானில் இருந்து தப்பித்த கைதி இம்மக்களிடம் சிக்கிக்கொண்டு மிக கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப் பட்டு தீவில் வீசப்பட்டார்.தவளை தன் வாயால் கெடும் என்பதற்கிணங்க தன் செயலால் தன் உயிரையே பலியாகக் கொடுத்துள்ளார் ஜார்ஜ் என்பவர்.

இதேப்போல் 1991-யில் 'பிரிம்ரோஸ்' என்கின்ற கப்பலில் சுற்றுலா பயணிகள் பயணித்து வந்தனர்.கப்பல் எதிர்பாராதவிதமாக சென்டினல் தீவில் பழுதாகி நின்றது.அதை கண்ட சென்டினல் மக்கள் கப்பலின் மீது அம்புகள் எய்தினார்.அதன்பிறகு கப்பல் தானாகவே புறப்பட்டதால் அக்கப்பலில் பயணித்த மக்கள் உயிர்தப்பினார்.கப்பல் அவ்விடத்தை விட்டு புறப்படாமல் இருந்திருந்தால் சென்டினல் மக்களுக்கு ஒரு பெரிய வேட்டை கிடைத்திருக்கும்.அந்தமான் கடலில் சுனாமி ஏற்பட்டபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.அரசாங்கத்திலிருந்து சென்டினல் மக்களின் நிலவரத்தை கணக்கிடும்படி ஹெலிகாப்டரில் சில படைகளை அனுப்பினர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் எப்படி??சென்டினல் மக்கள் மட்டும் உயிர்தப்பினார் என்று??கண்காணிக்க வந்த படைகளை கற்கள் வீசியும்,அம்பு எய்தியும் தாக்கினர் சென்டினல் மக்கள்.

1996-யில் இரண்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர்.அவர்கள் அம்பினால் எய்தியும்,கழுத்தை அறுத்தும் சென்டினல் மக்களால் கொலைசெய்யப்பட்டு பிணமாக வீசப்பட்டனர்.சென்டினல் மக்கள் வேற்று மக்களை ஏன் தங்களிடம் நெருங்கவிடமாட்டுகிறார்கள் என்று எல்லோரின் மனதில் ஒரு கேள்விக்குறியாக நின்றுவருகிறது.'ஒருவேளை அவர்களின் கலாசாரத்தை கெடுத்துவிடுவோம் என்று நினைக்கிறார்களோ என்னவோ'??அதனால் அரசாங்கம்,சென்டினல் தீவில் வேற்று மனிதர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களை யாரும் தவறான எண்ணத்திலோ அல்லது அவர்களுக்கு எந்தவித தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு அவர்களை நெருங்க கூடாது மீறினால் 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"யாராவது சென்டினல் தீவை நெருங்க நினைத்தால் சென்டினல் மக்களால் மரணம் நிச்சயம்..."

More News >>