ஸ்னைப்பர் இந்தியா: புதிய ஆண்ட்ராய்டு கேம்

எதிரிகளை துப்பாக்கியால் சுடக்கூடிய மொபைல்போன் விளையாட்டை நீங்கள் விரும்பினால் ஸ்னைப்பர் இந்தியா (Sniper India) ஏற்றதாகும். மொபைல் போன் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்திய நகரங்களில் சண்டை நடப்பதுபோன்று இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களின் வரைபடங்கள், நினைவு சின்னங்கள், கட்டடங்கள் மற்றும் படங்கள் என்று முழுவதும் இந்திய பின்னணியை கொண்டுள்ளது.

பப்ஜி மொபைல் போன்ற இதில், கடமையை நிறைவேற்ற துப்பாக்கியால் சுட்டு எதிரிகளை வீழ்த்துவதாக விளையாடவேண்டும். விளையாடுபவர் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு ஸ்னைப்பர் துப்பாக்கிகளிலிருந்து தனக்கு விருப்பமானதை தெரிவு செய்து கொள்ளலாம். இந்தியா கேட், செங்கோட்டை, சார்மினார் போன்ற முக்கிய இடங்களும் இவ்விளையாட்டில் இடம் பெற்றுள்ளன.

பூங்காக்கள், உயர்ந்த கட்டடங்கள், வெவ்வேறு இந்திய நகரங்களின் தெருக்களில் ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டுபிடித்து ஸ்னைப்பரால் சுடவேண்டும். இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சுடக்கூடாது. விளையாடுபவர் தனக்கு விருப்பமான நகரம் அல்லது இடத்தை தெரிவு செய்து கொள்ளலாம். தெரிவு செய்யும் நகரத்தின் வரைபடத்தை கொண்டு விளையாட்டு தொடரும்.

எதிரிகளை சுடுவதோடு, அவர்களுக்கு தப்பிப்பதும் சவாலான விஷயமாகும். எதிரிகள் வெவ்வேறு இடங்களில் ஒளிந்திருக்கக்கூடும். எதிரியை குறி வைத்து துப்பாக்கியால் சுடவேண்டும். குறிபார்க்கும் வசதி இருக்கிறது. விளையாட்டில் கூடுதல் கருவிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வேண்டுமென விரும்பினால் அதை செயலினுள்ளே வாங்கிக்கொள்ள முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.300 முதல் ரூ.800 வரையிலான விலையில் அவை கிடைக்கும். ஸ்னைப்பர் இந்தியா ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் விளையாடக்கூடியதாகும்.

More News >>