முகத்தில் உள்ள எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க வழி இருக்கா..?
அழகில் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்பவர்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகம். சில பெண்கள் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களது உடல் எடைக்கு ஏற்றவாறு முகம் இருப்பதில்லை. ஒல்லியான உடல் வாகுக்கு அதிக சதைகொண்ட முகம் நல்லாவா இருக்கும்..
ஜங்க் ஃபுட், நீர்ச்சத்து குறைபாடு, குடிப்பழக்கம் பரம்பரை, கிட்னி பிரச்சனை, சைனஸ், அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனை ஆகியவை காரணமாக முகத்தில் சதைகள் அதிகரித்து முகம் குண்டாக காணப்படுகிறது.
இப்படி முகத்தில் எஸ்ட்ராவாக இருக்கும் சதைகளை குறைக்க முடியுமா என்ற கேட்டால்..? அதற்கு பதில் ஆம் என்றே கூறலாம். முக சதைகளை கூறப்பதைக்கான எளிய வழிகள் குறித்து பார்ப்போமா..
தினமும் நம் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீரை குடிக்க வேண்டும் அல்லது நீர்ச்சத்து மிக்க இளநீர், மோர், பழச்சாறு வெள்ளரிக்காய், தர்பூசணி, தக்காளி, ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உணவுகளில் அதிகப்படியாக உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முகம் குண்டாகுவதை தடுப்பது மட்டுமின்றி பல உடல் உபாதைகள் வராமலும் தடுக்கலாம்.
வாழைப்பழம், கேரட், கீரை வகைகள் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் முகத்தின் சதை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
காய்கறி, பழங்கள் போன்ற இயற்கையான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். அதேபோல ஒரே நேரத்தில் அதிகப்படியாக வயிறு முட்டும் அளவிற்கும் சாப்பிடக்கூடாது.
முகத்தில் அதிக சதை ஏற்படுவதற்கு போதிய ஓய்வு இல்லாததும் ஒரு காரணம், எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
கூன் முதுகிட்டு உட்காருவது கூடாது, ஏனெனில் அப்படி உட்காருவதால் இடுப்பு பகுதி மற்றும் தாடைப் பகுதியில் அதிகப்படியான சதைகள் சேர்ந்துவிடும்.