நடிகர் நகுல் மனைவிக்கு தண்ணீர் டப்பில் பிரசவம் படங்கள் வெளியானதால் பரபரப்பு.. குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்கு பிறகு சர்ச்சை..
பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலா மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தி ருப்பவர் நகுல். இவரது மனைவி ஸ்ருதி 6 வருடத்துக்கும் மேலான காதலுக்கு பிறகு இருவரும் 2016ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர் 4 வருடம் கழித்து அதாவது 2020 ஆகஸ்ட் மாதம்தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அகீரா என பெயரிட்டிருப்பதாக நகுல் தெரிவித்திருந்தார். அகீரா என்றால் ஒளிமிக்கவர் என்று அர்த்தம்.
குழந்தை பிறந்து ஒரு மாதம் கடந்த நிலையில் நகுல் தனது இணைய தள இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அதிர்ச்சித் தரும் வகை யில் மனைவி குழந்தை பெற்றுக் கொள்ளும் படங்களை வெளியிட்டிருக் கிறார். பாத் டப் மீது நகுல் அமர்ந்திருக்க அவர் மீது மனைவி ஸ்ருதி சாய்ந்தபடி பாத் டப்பில் உட்கார்ந்துக்கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் குழந்தை பெற்றுக்கொள்ளும் காட்சிகள் பார்ப்ப வர்களை ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது.
இப்படடிக் கூடவா குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ள நிலையில் இதுவும் மருத்து வரீதியாக அனுமதிக்கப்பட்ட முறைதான். ஆபரேஷன் இல்லாமல் சுகபிரசவமாக இப்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை உள்ளது என மருத்துவ துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இதுபற்றி விளக்கம் டிவிட்டரில் அளித்துள்ள டாக்டர் சவீதா கதிரவன், ஐதராபாத்தில் உள்ள சன்க்டம் ப்ர்த் சென்டரில் (Sanctum Birth Centre) குழந்தை பேறு மருத்துவர்களின் உதவியோடு தான் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதிக்கு பிரசவம் நடை பெற்றது. மருத்துவர்கள், நர்ஸ்கள் என அனைவரது முன்னிலையில் தான் இது நடந்தது. இந்த விஞ்ஞான உண்மையை தெரியாமல் குறை கூறுவது சரியல்ல என தெரிவித்திருக்கிறார்.முன்னதாக தனக்கு சுகப் பிரசவம்தான் பாதுகாப்பான முறையில் நடக்க வேண்டும் என்று நகுல் மனைவி ஸ்ருதி எண்ணினார். அதற்காக டாக்டர்களிடம் அன்லைனில் ஆலோசித்ததுடன் தனக்கான முறையை அவரே தேர்தெடுத் தாராம்.