ரஷ்ய காதலர் உடன் மும்பையில் ஸ்ரேயா திருமணம்!

நடிகை ஸ்ரேயா தனது நீண்டகால நண்பரை திருமணம் செய்துள்ளார்.

2001-ம் ஆண்டும் தெலுங்கு பட உலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் சிம்புவுடன் தமிழில் 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்'திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சில நாள்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரேயா தனது நீண்டகால நண்பரான ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோசீவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் இவர்களது திருமணம் மார்ச் 18-ம் தேதி உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின. ஸ்ரேயா இதுகுறித்து எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது தாயார் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 12-ம் தேதி மும்பையில் உள்ள நடிகை ஸ்ரேயாவின் வீத்திலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

  

More News >>